அந்த அந்தி மாலை சாயும் நேரத்தில் அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது அங்கு ஒளிர்ந்த வண்ண மின் விளக்குகளின் அலங்காரம் மண்டபத்தின் மேனி முழுவதும் வானத்தின் விண்மீன்களின் சிதறல்களாக எழில் மிகுந்து காட்சியளித்தன. எங்கு நோக்கினும் மாவிலை தோரணங்கள் தென்னை கீற்றிலான தோரணங்கள் ஊஞ்சலாடின. வாயிலின் இரு மருங்கிலும் வாழைமரம் பூவோடு நாணி கோணி நின்றன அதிர்வேட்டின் ஓசை காதைப் பிளந்தது மங்கல வாத்தியங்களின் இசை விண்ணை முட்டியது.
ஆனால் அவள் மட்டும் கண்களிலே குளத்தை தேக்கி வைத்து மனக் குமுறலுடன் அழுத கண்களுடன் சோகமே உருவாக காட்சியளிக்கிறாள் அவள் தான் விடிந்தால் மணமுடிக்கப் போகும் மணப்பெண் வசந்தி.
ஆனால் அவள் மட்டும் கண்களிலே குளத்தை தேக்கி வைத்து மனக் குமுறலுடன் அழுத கண்களுடன் சோகமே உருவாக காட்சியளிக்கிறாள் அவள் தான் விடிந்தால் மணமுடிக்கப் போகும் மணப்பெண் வசந்தி.